ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் பல மாநிலங்களில் கடந்த மாதமே திறக்கப்பட்ட நிலையில் கேரளாவில் மட்டும் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி தான் திறக்கப்பட உள்ளன. 50 சதவீத இருக்கை வசதிகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என அரசு கூறினாலும் 2 டோஸ் தடுப்பூசி போட்ட பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது. இது வசூலிலும் நடைமுறையிலும் சிக்கலை ஏற்படுத்தும் என தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.
அதனால் இந்த சூழ்நிலையில் தங்களது படங்களை வெளியிட தயக்கம் காட்டும் பல தயாரிப்பாளர்கள், யாராவது ஒருவர் முதலில் தங்களது படத்தை வெளியிடட்டும் என்றும் அதில் வரும் லாப நஷ்டங்கள், நடைமுறை சிக்கல்களை கவனித்துக் கொண்டு அதன் பிறகு தங்களது படங்களை வெளியிடலாமா வேண்டாமா என தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 25ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறந்து கொள்ளலாம் என்றாலும் அன்றைய தினம் திங்கள்கிழமை என்பதால் 28 அல்லது 29 தேதிகளில் தான் தியேட்டர்களில் படங்கள் வெளியாகும். என்று தெரிகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக ஜோசப் மற்றும் ஜகமே தந்திரம் படங்களில் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள. ஸ்டார் என்கிற திரைப்படம் அன்றைய தினம் வெளியாகும் என தெரிகிறது