வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
2025ம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்ட் மாதம் இன்று 1ம் தேதி 7 தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் 'சரண்டர், உசுரே' ஆகிய இரண்டு படங்களில் இலங்கைத் தமிழர்கள் ஹீரோக்களாக நடித்துள்ளார்கள்.
'சரண்டர்' படத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலமான தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு 'கூகுள் குட்டப்பா, நாடு' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையிலிருந்து வந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி, பின்னர் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
'உசுரே' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவர் டீஜெ அருணாச்சலம். தனி இசை ஆல்பம் வெளியிட்டு பிரபலமான டீஜெ பின்னர் தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தில் அவரது மூத்த மகனாக நடித்தார். பின்னர் 'பத்து தல, பேட் கேர்ள்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இலங்கையிலிருந்து அகதியாகச் சென்று லண்டனில் செட்டிலானவர்.
'உசுரே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள ஜனனியும் இலங்கைத் தமிழர்தான். பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டவர். இலங்கையில் உள்ள டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர். இன்று வெளியான படங்களில் மூன்று இலங்கைத் தமிழர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.