வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த ஏஆர் ரஹ்மான். அடிக்கடி இசை வேலைகளுக்காக அமெரிக்காவிற்குச் செல்வார். தற்போது அமெரிக்கா சென்றுள்ள ஏஆர் ரஹ்மான், அங்கு மூத்த பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
“எனது சிறுவயது அபிமானியை அவரது டல்லாஸ் இடத்தில் சந்தித்தேன். அவரது ஆராய்ச்சிப் பணிகளையும், இந்திய பாரம்பரிய, (கர்நாடக) இசையின் மீதான அவரது ஆர்வத்தையும் கண்டு வியந்தேன்,” என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
ரஹ்மான் இசையில் 'பச்சைக் கிளிகள் தோளோடு, நெஞ்சே நெஞ்சே,' உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியிருக்கிறார் ஜேசுதாஸ்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இசை, பக்திப் பாடல்கள் என இந்திய மொழிகளில் பலவற்றில் பாடியவர் ஜேசுதாஸ். சமீப காலங்களில் சினிமாவில் பாடுவதை குறைத்துக் கொண்டுவிட்டார்.