ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா தாக்கம் இரண்டாவது அலையாக மாறி இந்த வருடம் வரை நீடித்ததால், பெரிய நடிகர்களின் படங்கள் திட்டமிட்டபடி படபிடிப்பை நடத்த முடியவில்லை. அதனால் எதிர்பாத்த தேதியில் ரிலீஸ் செய்யவும் முடியவில்லை. அந்த வகையில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் புஷ்பா என்கிற படத்தின் முதல் பாகத்தை இந்த வருடம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியிடுகிறார்கள். அதே சமயம் அடுத்த வருடம் தனது இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.
அந்த வகையில் இயக்குனர் வேணு ஸ்ரீராம் என்பவர் அல்லு அர்ஜுன் படத்தை இயக்க தயாராக இருக்கிறார். அதே சமயம் தற்போது பாலகிருஷ்ணாவை வைத்து அகண்டா என்கிற படத்தை இயக்கி வரும் போயப்பட்டி ஸ்ரீனு டைரக்ஷனிலும் நடிக்க இருக்கிறார் அல்லு அர்ஜுன். அந்த வகையில் அடுத்த வருடம் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடிக்க திட்டமிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.