ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சமீபத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் ப்ரோ டாடி என்கிற படத்தில் நடித்து முடித்த மோகன்லால், தனது அடுத்தடுத்த புதிய பட அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து அறிவித்து வருகிறார். அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஸ் டைரக்க்ஷனில் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது தன்னை வைத்து மூன்று வருடங்களுக்கு முன்பு ஒடியன் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் டைரக்ஷனில் மிஷன் கொங்கன் என்கிற படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள மோகன்லால். இதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மோகன்லாலை வைத்து ஸ்ரீ குமார் மேனன் இயக்கிய ஒடியன் படம் தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் இரண்டு வருடங்களுக்கு முன்பு மகாபாரத பீமனின் கதையை மைய்யப்படுத்தி உருவாக இருந்த ரெண்டா மூலம் என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கு கொடுத்தார் மோகன்லால். சுமார் ஆயிரம் கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக இருந்த அந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு வாய்ப்பை இந்த மிஷன் கொங்கன் படம் மூலமாக ஸ்ரீ குமார் மேனனுக்கு தந்துள்ளார் மோகன்லால். இந்த வாய்ப்பையாவது அவர் சரியாக பயன்படுத்துவார் என நம்புவோம்.