நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
பாலிவுட் நடிகை சன்னி லியோன் கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் மம்முட்டி நடித்த மதுர ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.. அதற்கு முன்பே மலையாளத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட ரங்கீலா என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டும் கோவாவில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தநிலையில் தற்போது ஷீரோ என்கிற இன்னொரு மலையாள படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் சன்னி லியோன். தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தை இயக்கும் ஸ்ரீஜித் விஜயன், “நிச்சயமாக சன்னி லியோனின் கவர்ச்சியை மட்டுமே மையப்படுத்தி இந்தப்படத்தின் கதையை உருவாக்கவில்லை. அவருக்கு நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் தான் இதில் உருவாக்கப்பட்டுள்ளது.. மும்பை சென்று சன்னி லியோனிடம் நேரிலேயே கதையை சொன்னதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். தற்போது இந்தப்படத்திற்கான ரிகர்சல் நடைபெற்று வருகிறது. சித்திரை விஷுவுக்குப்பின் துவங்க இருக்கும் படப்பிடிப்பில் சன்னி லியோன் நேரடியாக கலந்துகொள்கிறார்” என கூறியுள்ளார்.