ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சன்னி லியோன் கதை நாயகியாக நடிக்கும் ‛ஷெரோ' படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததை நாயகியுடன் இயக்குனர் ஸ்ரீஜித் அறிவித்துள்ளார். சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணாக சன்னி லியோன் நடித்துள்ளார்.
விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் அவர், எதிர்கொள்ளும், சம்பவங்களே படத்தின் கதை. ஆக்சன் காட்சிகளில் சன்னிலியோன் அசத்தியுள்ளார். மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் படம் வெளியாகிறது.
சன்னிலியோன் கூறுகையில், ‛‛ஷெரோ போன்ற சவாலான படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. என் கலைப்பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ஷெரோவும் ஒன்று' என்றார்.