மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
மலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் 'ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு'. சொல்லப்போனால் இந்த படம் தான் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் மம்முட்டியை கொண்டு சேர்த்தது. 1988-ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா(1989), சேதுராம ஐயர் சிபிஐ(2004), நேரறியான் சிபிஐ(2005) என மொத்தம் நான்கு பாகங்கள் இந்த 32 வருடங்களில் வெளியாகியுள்ளன.
இந்த நான்கு பாகங்களையும் இயக்கியவர் இயக்குனர் மது.. தமிழில் 'மௌனம் சம்மதம்' என்கிற படத்தை இயக்கியவர் இவர் தான். இந்த நான்கு பாகங்களுக்கும் கதை எழுதியவர் பிரபல சீனியர் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி. இந்தப்படத்தின் 5ஆம் பாகம் துவங்குவது பல வருடங்களாகவே தள்ளிப்போய்க் கொண்டிருந்த நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் படத்தின் தயாரிப்பு முன் பணிக்கான வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் மதுவும் கதாசிரியர் எஸ்.என்.சுவாமியும் தெரிவித்தார்கள்.
ஆனால் கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக அந்த வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டிருந்தன. மீண்டும் இயல்பு நிலை திரும்பியதும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என அப்போது கூறியிருந்தார் படத்தின் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி. இந்தநிலையில் தற்போது மம்முட்டியை நேரில் சந்தித்து இந்த படத்தை துவங்குவது பற்றி பேசிவிட்டு வந்துள்ளார் எஸ்.என்.சுவாமி. இந்த சந்திப்பின்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தற்போது 80 வயதாகும் எஸ்.என்.சுவாமி இந்த படத்தை பார்த்துவிட்டுத்தான் தன் உயிர் போகும் என்றும் ஏற்கனவே நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.