நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் த்ரிஷ்யம்.. மோகன்லால்-மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது த்ரிஷ்யம்-2 என்கிற பெயரில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்தப்படம் அமேசான் பிரைம் நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிப்பு வெளியானது. வரும் ஜனவரி-26ஆம் தேதி இந்தப்படம் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார். மேலும் இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகாததில் தனக்கு வருத்தமே என்றும் கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்தப்படத்தை எடுக்கும்போதே, விரைவில் நிலைமை சீராகிவிடும் அதனால் தியேட்டர்களில் வெளியிடலாம் என்கிற எண்ணத்தில் தான் இருந்தோம்.. ஆனால் டிச-17ஆம் தேதி இதன் டீசர் வெளியீட்டுக்கு பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டு ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தோம்.. பிரிட்டனில் இருந்து புதிய வைரஸ் ஒன்று உருவாகியுள்ள செய்தி வெளியானபின் தான் இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம்.. இந்தப்படம் குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பதால் தயாரிப்பாளருக்கு இழப்பு ஒன்றும் இல்லை.. அதேசமயம் இந்தப்படத்தின் இசை, ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவற்றை தியேட்டர்களில் ரசிகர்களால் பார்த்து ரசிக்க முடியாதே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது.. ஆனால் மோகன்லாலை வைத்து, நான் இயக்கிவரும், ராம் படத்தை நிச்சயம் தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்வேன்” என கூறியுள்ளார்.