ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கன்னடத்தில் உருவாகி, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ள படம் ‛கேடி - தி டெவில்'. துருவ் சர்ஜா நாயகனாகவும், ரீமா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் பிரபலங்களான சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரேம் என்பவர் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.
கேரளாவில் நடைபெற்ற இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஷில்பா ஷெட்டி, ‛‛மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை நான். ஹிந்தியை தவிர, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்துள்ளேன். மலையாளத்திலும் சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் பயம் காரணமாக நடிக்க சம்மதிக்கவில்லை. ஏனெனில், மலையாளத்தில் என் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியுமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் மலையாளத்தில் நடிப்பேன். இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான நடிகர்களில் ஒருவர் மோகன்லால். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். பாசில் இயக்கிய 'நோக்கேத்ததூரது கண்ணும் நட்டு' என்ற மலையாளப் படம் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று'' எனப் பேசியுள்ளார்.