சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், மலையாள சினிமாவில் இயக்குனராகும் ஆசையில் நுழைந்து, பின்னர் சூழ்நிலையால் தந்தையின் வழியில் தற்போது தானும் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல தற்போது மோகன்லாலின் மகள் விஸ்மாயாவும் மலையாள திரை உலகில் 'தொடக்கம்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை மையப்படுத்தி வெளியான '2018' என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் கேரளாவில் இடுக்கி மாவட்டம் குட்டிக்கானம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
அதே இடுக்கி மாவட்டத்தில் இன்னொரு பகுதியில் மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்து வரும் 'திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது மகள் நடிக்கும் தொடக்கம் படப்பிடிப்பு தளத்திற்கு மோகன்லால் நேரில் விசிட் அடித்துள்ளார். மகள் நடிப்பதை பார்ப்பதற்காக அவர் வந்துள்ளார் என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும் இந்த படத்தில் மோகன்லாலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதேபோல தான் அவரது மகன் பிரணவ் கதாநாயகனாக அறிமுகமான 'ஆதி' படத்திலும் மோகன்லால் ஒரு நடிகராகவே சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




