தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பராசக்தி'. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் கடந்த ஓரிரு மாதங்களாக தடைபட்டிருந்தது. அந்த சிக்கல்கள் தீர்ந்து தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
2026 பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அப்போதுதான் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படமும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இடையில் ஏற்பட்ட தாமதங்களால் 'பராசக்தி' படப்பிடிப்புக்குக் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டது. இதனால், பொங்கல் வெளியீடாக வருவதில் மாற்றம் ஏற்படலாம் என்கிறார்கள்.
இன்னும் முழு படப்பிடிப்பு முடியவேண்டும், அதன்பிறகு இறுதிக்கட்டப் பணிகள் நடக்க வேண்டும். அனைத்துமே அடுத்த ஐந்து மாதங்களுக்குள் நடக்க வாய்ப்பில்லை. இது ஒரு பீரியட் படம் என்பதும் ஒரு காரணம். எனவே, பொங்கலுக்குப் பிறகே இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் தகவல்.