'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். தமிழில் ஜெகமே தந்திரம் படத்தில் அறிமுகமாகி சமீபத்தில் வெளியான தக் லைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோசப் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் வெற்றி பெற்ற இவர், கடந்த வருடம் வெளியான பணி என்கிற படத்தை இயக்கி வெற்றிகரமான இயக்குனர் என்கிற பெயரையும் பெற்றார். தன் மனைவிக்கு ஒரு தீங்கை ஏற்படுத்திய இரண்டு இளைஞர்களுக்கு கணவன் எப்படி வித்தியாசமான முறையில் பாடம் புகட்டுகிறான் என்பதை மையப்படுத்தி ஒரு வித்தியாசமான பழிவாங்கல் கதையாக இந்த படத்தை அவர் கொடுத்திருந்தார்.
ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. இதையடுத்து பணி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறேன் என கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் தற்போது அந்த இரண்டாம் பாகத்திற்கு டீலக்ஸ் என டைட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் நடைபெற்ற அவரும் ரேவதியும் நடிக்கும் ஆஷா படத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் இந்த படத்தின் டைட்டிலை ஜோஜூ ஜார்ஜ் அறிவித்தார்.