ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

இந்த வருட ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிருதயபூர்வம், பஹத் பாசில் நடிப்பில் ஓடும் குதிரை சாடும் குதிரை மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் லோகா சாப்டர் 1 சந்திரா ஆகிய படங்கள் வெளியாகின. தொடரும் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வெளியாகும் மோகன்லால் படம் என்பதால் ஹிருதயபூர்வம் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோலத்தான் பஹத் பாசில் படமும். ஆனால் இந்த இரண்டு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறிவிட்டன. அதே சமயம் சூப்பர் வுமன் கதை அம்சத்துடன் வெளியாகிய கல்யாணி பிரியதர்ஷனின் லோகா சாப்டர் 1 சந்திரா திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
படம் வெளியான மறுநாளில் இருந்தே இந்த படத்திற்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது எந்த அளவிற்கு என்றால் மோகன்லால், பஹத் பாசில் படத்தை விட கல்யாணியின் படத்திற்கு காட்சிகள் அதிக அளவில் திரையிடப்பட்டுள்ளன. இன்று (ஞாயிறு) கொச்சியில் உள்ள திரையரங்குகளில் மட்டும் லோகா 196 காட்சிகளும் ஹிருதயபூர்வம் 134 காட்சிகளும் ஓடும் குதிரை சாடும் குதிரை 82 காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளதே இதற்கு சான்று. கேரளா முழுவதிலும் கல்யாணியின் படத்திற்கு காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.