சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

நடிகர் மம்முட்டி கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக ஓய்வெடுத்து வந்த நிலையில் மீண்டும் சுறுசுறுப்பாக மோகன்லாலுடன் தான் இணைந்து நடித்து வரும் பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.. கொச்சியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கேரளாவில் குறிப்பிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.. இதனை தொடர்ந்து மம்முட்டி தனது வாக்கை செலுத்த விரும்பிய போது வாக்காளர் அவரது பெயர் விடுபட்டு போனது தெரிய வந்தது.
இதனால் அவரால் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த முடியாமல் போனது. இதற்கு முன்னதாக மம்முட்டி, கொச்சி பனம்பள்ளி நகரில் வசித்து வந்தார். அதன்பிறகு அவர் எர்ணாகுளத்திற்கு புதிய வீட்டிற்கு மாறினார். அதனால் பழைய வீட்டில் இருந்து தனது புதிய வீட்டின் முகவரிக்கு வாக்கு விபரங்களை மாற்ற தவறியதால், அவர் இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க இயலாமல் போனது என்று தெரியவந்துள்ளது.