சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

மோகன்லால், நிவின்பாலி மற்றும் மோகன்லாலின் மகன் பிரணவ் மூவரும் சமீபத்தில் தனி விமானம் ஒன்றில் ஒன்றாக பயணித்தது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த புகைப்படத்தை நடிகர் நிவின்பாலி பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியான பயணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவர்கள் இப்படி பயணம் மேற்கொண்டது சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக என்று தெரிய வந்துள்ளது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று நிவின்பாலி நடித்துள்ள சர்வம் மாயா திரைப்படமும், மோகன்லால் நடித்துள்ள விருஷபா திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது என்பதும், அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.