காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பெரிய நடிகர் படங்களோ அல்லது இரண்டாம் கட்ட ஹீரோக்களின் படங்களோ வெளியாகும்போது அவற்றில் ஒரு பிரபல நடிகர் சில நிமிடங்களே வந்து போகும் சிறப்பு தோற்றத்தில் நடித்தால் படத்திற்கு அது ஒரு மாஸ் ஆக இருக்கும் என நினைத்து சமீபகால படங்களில் அதை ஒரு ட்ரெண்ட் ஆகவே மாற்றி விட்டார்கள். குறிப்பாக தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், சமீபத்தில் வெளியான கூலி திரைப்படங்களில் சூர்யா, அமீர்கான் ஆகியோரை அப்படி பயன்படுத்தியிருந்தார். அதேசமயம் தமிழை விட மலையாளத்தில் இந்த கேமியோ ஜுரம் தற்போது அதிகமாகியுள்ளது என்று சொல்லலாம்.
இந்த வாரம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிருதயபூர்வம் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ள லோகா சாப்டர் 1 சந்திரா ஆகிய படங்கள் வெளியாகின. இதில் ஹிருதயபூர்வம் படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஆக இயக்குனரும் நடிகருமான பஷில் ஜோசப் ஒரு சில நிமிடங்கள் வந்து போகும் ஒரே ஒரு காட்சியிலும், நடிகை மீரா ஜாஸ்மின் கிளைமாக்ஸில் சில நொடிகளே வந்து போகும் ஒரு காட்சியிலும் நடித்துள்ளனர்.
அதேபோல கல்யாணி பிரியதர்ஷனின் லோகா படத்தில் நடிகர்கள் சவுபின் சாஹிர், டொவினோ தாமஸ், இவர்கள் போதாது என்று கிளைமாக்ஸ் காட்சியில் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இவர்களால் கதையில் எந்தவித தாக்கமும் இல்லை என்றாலும் நட்பின் அடிப்படையில் இப்படி நடித்துள்ளனர் என்றே தெரிகிறது.