பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? |

மலையாள திரையுலகில் 2016ல் பஹத் பாசில் நடிப்பில் வெற்றி பெற்ற மகேஷ்ஷிண்டே பிரதிகாரம் படம் வெளியானது. அந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா பாலமுரளி, பஹத் பாசில் நண்பராக நடித்த சவ்பின் சாஹிர் ஆகியோர் இன்று மிகப்பெரிய உயரத்தில் இருக்கின்றனர். அதேபோல அந்த படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகமான அலான்சியர் லே லோபஸும் மலையாள திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் உடல் மெலிந்து அதேசமயம் காக்கி யூனிபார்மில் இருக்கும் ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது.
அதன்பிறகு தான் அவர் தற்போது தான் நடித்து வரும் 'வேற ஒரு கேஸ்' என்கிற படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக இப்படி உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் என்பதே தெரியவந்தது. படத்தின் இயக்குனர் இவரிடம் அந்த கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் மெலிந்த தோற்றத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியதை சீரியஸாக எடுத்துக் கொண்டு அவர் சில டயட் முறைகளை கடைபிடித்து தனது உடலை மெலிந்த தோற்றத்திற்கு மாற்றியுள்ளார். ஆனாலும் பலரும் இவருக்கு உடல்நிலை என்ன ஆனது என்று தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவலை தெரிவித்து வந்தனர்.
இது குறித்து சமீபத்தில் அலான்சியர் லே லோபஸிடம் கேட்கப்பட்டபோது, “படத்திற்காக உருமாற்றம் செய்வது, உடம்பை குறைப்பது என்பது ஒரு நடிகரின் கடமை. அதைத்தான் நானும் செய்தேன். நடிகர் பிரித்விராஜ் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்திற்கு மாறினால் சூப்பர் என்கிறார்கள், அதையே நான் செய்தால் இவர் உடம்புக்கு என்ன பிரச்சனை, எதுவும் நோய்வாய் பட்டிருக்கிறாரா என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இது மீடியாவில் பரவ ஆரம்பித்ததும் அடுத்து என்னை படத்தில் ஒப்பந்தம் செய்ய நினைக்கும் பலரும் என் உடல் நிலையில் ஏதோ பிரச்சனை இருக்கிறதோ என்கிற காரணத்தினால் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள் என்பதும் தெரிய வந்தது. தயவுசெய்து இது போன்று தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.