தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அன்னா லெஸ்னேவா. அவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர்.
2013ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஹைதராபாத்தில் தான் வசித்து வந்தனர். கடந்த வருடம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தனது குடும்பத்தினரை சிங்கப்பூர் அனுப்பிவிட்டார் பவன் கல்யாண். அங்குள்ள பள்ளிகளில் அவரது குழந்தைகள் படித்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மார்க் சங்கர் படித்த பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் மார்ச் சங்கர் காயமடைந்தார். சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, தனது குடும்பத்தாருடன் இன்று ஹைதராபாத் திரும்பினார் பவன் கல்யாண்.
பவன் கல்யாண் தனது குடும்பத்தினரை தன்னுடனேயே வைத்துக் கொள்வாரா அல்லது மகனுக்கு முழுமையாக குணமடைந்த பின் அவர்களை மீண்டும் சிங்கப்பூர் செல்ல வைப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
தனது மகன் குணமடைய வாழ்த்தும், பிரார்த்தனையும் செய்த அனைவருக்கும் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார்.




