ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல எடிட்டராக வலம் வந்த மகேஷ் நாராயணன் கமலின் விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் இணைந்து நடித்த டேக் ஆப் திரைப்படம் மூலம் இயக்குனர் ஆக மாறினார். பிறகு தொடர்ந்து பஹத் பாசிலை வைத்து மாலிக், சி யூ சூன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
தமிழில் முதன்முறையாக கமல் நடிக்கும் படம் ஒன்றை இவர் இயக்கப் போவதாக கடந்த வருடமும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் மலையாளத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 16 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார் மகேஷ் நாராயணன். இதில் அவரது முதல் பட கதாநாயகர்களான பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவருமே முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, “தமிழில் நிச்சயமாக கமல் படம் மூலம் தான் என்ட்ரி கொடுப்பேன். ஆனால் அதன் உருவாக்கத்திற்கு இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும். அந்த கதையை இப்போது நான் இயக்கி வரும் மோகன்லால், மம்முட்டி படத்திற்காக பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் நான் எழுதிய புதிய கதை. இந்த படத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை. படத்தில் முழு நீள கதாபாத்திரத்தில் தான் இருக்கிறார். அது மட்டுமல்ல, என் படத்தில் நடித்தவர்கள் என்பதால் பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவரையும் ஏதோ கருவேப்பிலை போல பயன்படுத்த மாட்டேன். அவர்களுக்கும் இந்த படத்தில் வலுவான கதாபாத்திரங்கள் இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.