ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாள திரையுலகில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கமும் அது கொடுத்த தைரியமும் பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக பேசவும் காவல்துறையில் புகார் அளிக்கவும் வைத்தது. அந்த வகையில் பிரபல மலையாள வில்லன் மற்றும் குணசத்திர நடிகரான சித்திக் மீது இளம் நடிகை ஒருவர் திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இதனால். தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சில நாட்களாக தலைமறைவானார் நடிகர் சித்திக். அதை தொடர்ந்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இவரை கைது செய்வதற்கு தடை விதித்து இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டது. தனக்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து தலைமறைவில் இருந்து வெளியே வந்து தற்போது பொதுவெளியில் தலை காட்டத் துவங்கியுள்ளார் நடிகர் சித்திக். அந்த வகையில் தனது பிறந்த நாளையும் தனது பேரனின் நூல்கட்டு விழாவையும் ஒரு சேர கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சித்திக். இது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அவரது மகன் ஷாகின் சித்திக்.