அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” |
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக நடித்தவர் கீது மோகன்தாஸ். தமிழில் நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு இயக்குனராக மாறி விருதுக்கான படங்களாக இயக்கி வருகிறார். அதிலிருந்து சற்று மாறி, கமர்சியல் அம்சங்களுடன் தற்போது கன்னடத்தில் பிரபல முன்னணி நடிகரான யஷ் நடிக்கும் டாக்ஸிக் என்கிற படத்தை இயக்கி வருகிறார் கீது மோகன்தாஸ்.
இந்த நிலையில் இவருக்கும் யஷ்ஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது படத்தின் பல காட்சிகளை நடிகர் யஷ் தான் இயக்கி வருகிறார் என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மலையாள நடிகர் சுதேவ் நாயர் என்பவர் இது பொய்யான தகவல் என இது குறித்து கூறியுள்ளார்.
“இது சிலரால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. நான் பணியாற்றிய படங்களிலேயே அழகாக, டென்ஷன் இல்லாமல் இயங்கி வரும் படக்குழு என்றால் அது இதுதான். இன்னும் சொல்லப்போனால் இயக்குனரும் மற்றும் ஹீரோ யஷ் இருவருமே எந்த ஈகோவும் இன்றி ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை பரிமாறி கொள்வதை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். இவர்கள் இருவரது நோக்கமும் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.