ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருபவர் சித்திக். கடந்த வருடம் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு சினிமா சார்ந்த பல பெண்கள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நடிகர்களில் சித்திக்கும் ஒருவர். நடிக்கும் ஆர்வத்துடன் வந்த இளம்பெண் ஒருவரை நடிகர் சித்திக் தான் நடித்த படம் ஒன்றின் பிரிவியூ காட்சி பார்க்கும்படி அழைத்ததாகவும் அதை பார்த்த பிறகு அது குறித்து விவாதிக்க தன்னை தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வரச் சொன்னதாகவும் அங்கு சென்றபோது தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் காவல்துறையில் அந்த பெண் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் சித்திக் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தான் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகி இருந்த படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி வழங்கும்படியும் தன்னுடைய பாஸ்போர்ட்டை தன்னிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் சித்திக்.
இதனை விசாரித்த நீதிமன்றம் வரும் செப்டம்பர் 19 முதல் 24 வரை அரபு நாடுகளுக்கு சென்று வரவும் அக்டோபர் 13 முதல் 18 வரை கத்தாருக்கு சென்று வரவும் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் ஒவ்வொரு முறை அவர் வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதும் தனது பாஸ்போர்ட்டை காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் விதித்துள்ளது.