ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். பல வருடங்களாக முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை இவர் கொடுத்து இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான புஷ்பா படம் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் சுகுமாரின் மனைவி தபிதாவும் திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். ஆம்... தெலுங்கு திரையுலகின் பிரபலமான குணச்சித்திர நடிகரான ராவ் ரமேஷ் தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள மாருதி நகர் சுப்பிரமணியம் என்கிற படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு திரைப்பட வெளியீட்டாளராக சினிமாவில் தற்போது நுழைந்துள்ளார் தபிதா. இந்த படத்தை லக்ஷ்மன் காரியா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஆக., 23ம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. இந்த தகவலை தபிதாவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.