பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தென்னிந்திய ரசிகர்களிடம் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் மட்டுமல்ல பொது இடங்களிலும் கூட எப்போதும் புன்னகையுடன் வலம் வரும் ராஷ்மிகாவை பார்க்கும் போது எதிரில் இருப்பவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி தொற்றிக்கொள்ளும். அது மட்டுமல்ல எந்த இடத்திலும் ரசிகர்களை ஒதுக்காமல் அவர்களுடன் பேசி, புகைப்படம் எடுத்துக் கொள்ள தயங்காதவர்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் வருகை தந்திருந்தார் ராஷ்மிகா. இந்த நிகழ்ச்சியில் அவரே எதிர்பாராத விதமாக கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கும் வரவேற்பதற்கும் தயாராக கூடியிருந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போய்விட்டதாக கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அவர்களை உர்ச்சாகப்படுத்தும் விதமாக வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலின் சில வரிகளுக்கு நாணமும் ஆடினார் ராஷ்மிகா.
“இத்தனை பேர் கூடியிருந்தாலும் இந்த நிகழ்ச்சி எந்தவித குழப்பமும் இல்லாமல் அழகாக நிர்வகிக்கப்பட்டது. இத்தனை பேரின் அன்பை பெறுவதற்காக நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனாலும் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன் கேரள ரசிகர்களை டார்லிங் என்றும் புகழ்ந்துள்ளார் ராஷ்மிகா.