தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் |

மலையாள திரையுலகில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் வினித் சீனிவாசன். சீரான இடைவெளியில் படங்களை இயக்கி வருவதுடன் படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது ‛வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தை இவர் இயக்கியுள்ளார். மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக நடிக்க முக்கிய வேடத்தில் நிவின்பாலி நடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் இயக்கத்தில் வெளியான ஹிருதயம் திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதில் இரண்டு பாடல்கள் ரசிகர்களின் பேவரைட் ஆக மாறின.. அந்தப் படத்தில் சேஷம் அப்துல் வகாப் என்பவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் வினித் சீனிவாசன். அவர் தற்போது தெலுங்கில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக மாறிவிட்டார்.
இந்த நிலையில் இந்த ‛வருஷங்களுக்கு சேஷம்' படத்தில் பிரபல பின்னணி பாடகியின் மகன் அம்ரித் ராம்நாத்தை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியுள்ளார் வினித் ஸ்ரீனிவாசன். இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன.




