ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
2026ம் வருடத்திற்கான ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள உலகெங்கிலும் இருந்து பல நாடுகள் தங்களது படங்களை தேர்வு செய்து அனுப்ப துவங்கியுள்ளன. பிரபல மலையாள இயக்குனர் இயக்கிய படம் ஒன்று 2026க்கான ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளது. ஆனால் இதில் ஆச்சரியமான ஒரு ட்விஸ்ட் உள்ளது. மலையாளத்தில் கமர்சியல் வெற்றியை கணக்கிட்டு படம் இயக்காமல் தேசிய விருது மற்றும் சர்வதேச விருதுகளை குறிவைத்து படம் இயக்கி வருபவர் டாக்டர் பைஜூ என்பவர். மலையாள காமெடி நடிகராக வலம் வந்த சுராஜ் வெஞ்சாரமூடுவை குணச்சித்திர நடிகராக்கி தேசிய விருது பெற்று தந்தவர். இவர் இயக்கியுள்ள படம் தான் ‛பாபா புக்கா' (PAPA BUKA) டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ?
ஆம் இந்த இந்தப் படம் தயாராகி இருப்பது தமிழிலோ மலையாளத்திலோ அல்ல. ஓசானியா நாட்டிற்கு சொந்தமான பப்புவா நியூ கினியா என்கிற ஒரு தீவு நாட்டில் இருந்து தான் இந்த படம் உருவாகி உள்ளது. அந்த நாட்டில் உள்ள தயாரிப்பு நிறுவனமும் இன்னும் மூன்று இந்திய தயாரிப்பாளர்களும் சேர்ந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள். அதில் ஒருவர்தான் தமிழ் இயக்குனர் பா.ரஞ்சித்.
பப்புவா நியூ கினியா, சுதந்திரம் பெற்று தற்போது ஐம்பதாவது வருடத்தை கொண்டாடி வரும் நிலையில் அந்த நாட்டிலிருந்து ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் படம் இதுதான். அது மட்டுமல்ல ஒரு இந்திய இயக்குனர் வெளிநாட்டிற்காக படம் இயக்கி அது ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்படுவதும் இதுதான் முதல் முறை. இப்படி ரசிகர்களே கேள்விப்பட்டிராத ஒரு நாட்டில் இருந்து உருவாகி இருக்கும் படத்தில் மலையாள இயக்குனர் பைஜூவும் தயாரிப்பாளராக பா.ரஞ்சித்தும் தங்களை எப்படி இணைத்து கொண்டார்கள் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.