பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா |
இசையமைப்பாளர் தமன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக இசையமைத்து வருகிறார். தெலுங்கில் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்திற்குப் பிறகு அவர் அதிகப் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். அந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதே அதற்கு ஒரு காரணம்.
2021ல் பொயப்பட்டி சீனு இயக்கத்தில் தமன் இசையமைக்க பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படம் 'அகாண்டா'. அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. சமீபத்தில் அந்தப் படம் குறித்து பொயப்பட்டி சீனு, ஒரு பேட்டியில் பேசும் போது ‛தமனின் பின்னணி இசை இல்லை என்றாலும் அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்' எனக் கூறியிருந்தார். அப்படத்தில் தமனின் பின்னணி இசை காட்சிகளை இன்னும் அதிரடியாகக் காட்டியது என்பதுதான் ரசிகர்களின் கருத்து. பொயப்பட்டி சொன்ன கருத்துக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் எக்ஸ் சமூக வலைதளத்தில், 'எனக்குக் கவலையில்லை' என ஒரே வரியில் பதிவிட்டுள்ளார். பொயப்பட்டி சீனுவின் பேட்டிக்கான பதிலடி தான் அது என ரசிகர்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
பொயப்பட்டி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'ஸ்கந்தா' படத்திற்கு தமன் தான் இசை. பாலகிருஷ்ணா நடித்து அக்டோபர் 19ல் வெளிவர உள்ள 'பகவந்த் கேசரி' படத்திற்கும் தமன் தான் இசையமைத்துள்ளார்.