பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் | லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது |
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளம், தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் படம் கிங் ஆப் கோதா. இதில் துல்கர் சல்மான், ஜஸ்வர்யா லஷ்மி, பிரசன்னா, ரித்திகா சிங், சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பீஜாய் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தமிழில் கலாட்டாகாரன், மலையாளத்தில் கலாபக்காரா ஆகிய பெயர்களில் வருகின்ற ஜூலை 28ம் தேதி துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது என அறிவித்துள்ளனர். மேலும், துல்கர் சல்மான், ரித்திகா சிங் இணைந்து நடனம் ஆடும் இந்த பாடலை பென்னி டாலர், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளதாக கூறப்படுகிறது.