ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நேற்று டில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இதில் 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இதில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்ற இசை யமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதை அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நடிகை ரவீனா டாண்டனும் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
பத்மக்ஷ விருது பெற்ற கீரவாணி உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛என் பெத்தண்ணாவை(பெரிய அண்ணன்) நினைத்து பெருமைப்படுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் ராஜமவுலி.