ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். கமர்சியல் ஆக்சன் படங்களுடன் துப்பறியும் த்ரில்லர் படங்களையும் கொடுப்பதில் வித்தகரான இவரது இயக்கத்தில் கடந்த 2006ல் மலையாளத்தில் சிந்தாமணி கொல கேஸ் என்கிற படம் வெளியானது. ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நடைபெறும் விசாரணையை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் லால் கிருஷ்ணா விராடியார் என்கிற பிரபல வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி நடித்திருந்தார்.
இந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என பர்ஸ்ட்லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். இதிலும் சுரேஷ்கோபியே கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல கதாசிரியர் ஏ.கே.சாஜன் எழுதுகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகில் இருந்து ஒதுங்கியது போல காணப்பட்ட இயக்குனர் ஷாஜி கைலாஷ், கடந்த ஆறு மாதங்களில் கடுவா, காபா, அலோன் ஆகிய மூன்று படங்களை இயக்கி விட்டார்.
தற்போது பாவனா கதாநாயகியாக நடித்து வரும் ஹன்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு சிந்தாமணி கொல கேஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்குகிறார். இந்த படம் இவரது டைரக்ஷனிலேயே கடந்த 2008ல் தமிழில் நடிகர் ஆர்கே நடிக்க எல்லாம் அவன் செயல் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கேயும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.