'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
திரையுலகில் கதாநாயகனாக நுழைந்து பிற்காலத்தில் வில்லனாக வலம் வந்தவர் கிருஷ்ணம் ராஜூ. இவர் தெலுங்கு திரையுலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர், பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷியாம் படத்தில் நடித்திருந்தார். ‛ரிபல் ஸ்டார்' என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணம் ராஜூ, நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் இவர் எம்.பி.,யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 83. இவரது மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.