ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மலையாளத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் த்ரிஷ்யம். இந்த படத்தில் ஐஜி கீதா பிரபாகர் என்கிற கண்டிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஆஷா சரத். அதைத்தொடர்ந்து தமிழில் பாபநாசம், தூங்காவனம் மற்றும் மலையாளத்தில் திரிஷ்யம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்தே நடிப்பின் மீதான ஆர்வத்தால் திரையுலகில் நுழைந்தவர். அதேசமயம் குடும்பம், நடிப்பு என சரிசமமாக முக்கியத்துவம் கொடுத்து பயணித்து வருகிறார் ஆஷா சரத்.
இந்தநிலையில் தற்போது தனது குடும்பத்துடன் ஸ்வீடன் நாட்டில் விடுமுறையை கழித்து வரும் ஆஷா சரத் தனது 29 ஆவது திருமண நாளை தனது கணவர் சரத் வாரியருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கை என்பதே ஒரு கொண்டாட்டம். என் கணவருடன் 29வது திருமண நாளை சுவீடனில் கொண்டாடி வருகிறேன். இந்த வாழ்க்கை பயணத்தில் சந்தோசம், மகிழ்ச்சி, வருத்தம், வலி என கடினமான மற்றும் மென்மையான பாதையில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பயணித்து இருக்கிறோம். எங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் எங்களை வாழ்த்தியவர்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.