லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளர், நடிகர் என பிரபலமாக வலம் வந்த நடிகர் விஜய்பாபு மீது, நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என துணை நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல்-22ல் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று ஒரு மாத காலத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த விஜய்பாபு அங்கிருந்தபடியே முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கேரளா திரும்பி போலீசாரின் விசாரணைக்கும் நேரில் ஆஜரானார் விஜய்பாபு. இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். ஆனால் உயர்நீதிமன்றம் நடிகருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து கேரள அரசும், பின்னர் பாதிக்கப்பட்ட நடிகையும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று கேரள அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் விஜய்பாபுவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டது.
மேலும் தடயங்களையோ சாட்சிகளையோ கலைக்கும் முயற்சியில் ஈடுபடது கூடாது, சம்பந்தப்பட்ட நடிகை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரிலோ, சோசியல் மீடியா மூலமாகவோ மிரட்டல் விடும் விதமாக விதமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்கிற அறிவுறுத்தலையும் நடிகருக்கு பிறப்பித்துள்ளது.