ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாள திரையுலகில் தொண்ணூறுகளில் மும்மூர்த்திகள் என சொல்லப்பட்டவர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி. ஆனால் மோகன்லாலும் மம்முட்டியும் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் பலவித பொறுப்புகள் வகித்து ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.. ஆனால் 90களில் வெளிநாட்டிற்கு சென்று கலை நிகழ்ச்சி நடத்துவதில் சுரேஷ்கோபிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் சங்கம் சம்பந்தமான எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதை சுரேஷ்கோபி தவிர்த்து வந்தார்.
குறிப்பாக நடிகர் சங்கம் பக்கமாக கடந்த 20 வருடமாக அவர் வரவே இல்லை. இந்த நிலையில் தனது மனக்கசப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு வருகை தந்தார் சுரேஷ்கோபி. 20 வருடம் கழித்து நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த அவரை சங்க உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வில் வில்லன் நடிகர் பாபுராஜ், நடிகை ஸ்வேதா மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.