ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ரசிகர்கள் மட்டுமல்ல, மலையாள திரையுலகமும் ஆச்சர்யப்படும் விதமாக மம்முட்டியுடன் இணைந்து 'புழு' என்கிற படத்தில் நடித்துள்ளார் நடிகை பார்வதி.. சில வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த கசபா படம் பற்றி அவர் சொன்ன சர்ச்சையான கருத்தும், அதனால் பார்வதிக்கு போடப்பட்ட மறைமுக ரெட்கார்டும் தான் இந்த ஆச்சர்யத்துக்கு காரணம்.. ஆனால் சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பது போல அதையெலாம் தாண்டி இப்போது புழு என்கிற படத்தில் இருவரும் ஜோடியாகவே நடித்து முடித்தும் விட்டார்கள்.
அறிமுக பெண் இயக்குனர் ரதீனா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர்களை பார்க்கும்போதே மம்முட்டி இதற்குண் பார்த்திராத ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது. நேற்றுதான் (மே-1) மம்முட்டி நடித்த சிபிஐ-5 படம் தியேட்டர்களில் வெளியாகியுள்ள நிலையில் இந்தப்படம் வரும் மே-13ஆம் தேதி நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது.