ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த 2020ல் இவ்வுலகை விட்டு பிரிந்துசென்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மறைவு தமிழ் திரையுலகம் மட்டும் மட்டுமல்லாமல், மொழி தாண்டி அனைத்து இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தநிலையில் கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சுரேஷ்கோபி, இளையராஜாவின் இசையில் எஸ்பிபி பாடிய இளையநிலா பொழிகிறதே என்கிற பாடலை பாடி மணமக்களையும் அங்கு வந்திருந்தவர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் இன்னிசை கச்சேரியை நடத்திய வயலினிஸ்ட் சபரீஷ் பிரபாகர் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் சுரேஷ்கோபி இந்த பாடலில் சில வரிகளை மட்டும் பாடினாலும், அவர் எஸ்பிபி பாடலை பாடினர் என்பதாலேயே அந்த அரங்கம் முழுதும் எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனதாக கூறியுள்ளார் சபரீஷ் பிரபாகர். நடிகர் சுரேஷ்கோபி தற்போது தமிழரசன் என்கிற படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.