அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் குரூப் என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து பிரபல இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் என்கிற படம் வரும் ஜனவரி 14 அன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை துல்கர் சல்மானின் சொந்த நிறுவனமான வே பாரர் பிலிம்ஸ் தான் தயாரித்துள்ளது தற்போது ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்து பரவிவரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.
இந்த படத்தில் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் துல்கர் சல்மான். இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் ஏற்கனவே மும்பை போலீஸ் என்கிற அதிரடி போலீஸ் படத்தை இயக்கியதால், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
இதை குறிப்பிட்டுள்ள துல்கர் சல்மான் உங்கள் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தாலும் சமூக நோக்கில் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால், இந்த சமயத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது என்று தள்ளி வைத்துள்ளோம் என கூறியுள்ளார்




