ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஒருவரை கடந்த 2017ம் ஆண்டு மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கினர். இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பலாத்காரத்திற்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட திலீப் 84 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக திலீபின் நண்பரும் இயக்குனருமான பாலசந்திர குமார் கொடுத்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவில் சத்தம் போதாது என்று அந்த வீடியோவை ஸ்டூடியோவில் கொடுத்து 20 மடங்கு சத்தத்தை உயர்த்தி திலீப் கேட்டு மகிழ்ந்தாகவும், விசாரணை அதிகாரியை லாரி ஏற்றி கொல்ல குடும்ப உறுப்பினர்களுடன் திட்டமிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து திலீப், அவரது சகோதரர் அனூப், மைத்துணர் சூரஜ், அப்பு, பாபு உள்பட 6 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் விசாரணையை சிதைக்கும் பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கில் போதிய ஆதாரமில்லை என திலீப் விடுதலை ஆகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாக்குமூலமும், வழக்கும் திலீபுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த புதிய வழக்கு தொடர்பாக தான் கைதாகலாம் என்பதால் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் திலீப்.