புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
படம் : அறிந்தும் அறியாமலும்
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : ஆர்யா, பிரகாஷ்ராஜ், நவ்தீப், சமேஷா
இயக்கம் : விஷ்ணுவர்த்தன்
தயாரிப்பு : 'புன்னகை பூ' கீதா
பிரகாஷ்ராஜை தவிர, அதிகம் பிரபலமாகாத ஆர்யா, தெலுங்கு நடிகர் நவ்தீப் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த, அறிந்தும் அறியாமலும் படம், பெரும் வெற்றி பெற்றது. ராம்கோபால் வர்மா, மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணியாற்றிய விஷ்ணுவர்த்தன், முதலில் இயக்கிய, குறும்பு படம் வெற்றி பெறவில்லை. அடுத்த படத்தில் கூடுதல் சிரத்தை மேற்கொண்டு, திரைக்கதையில் கவனம் செலுத்தி, அறிந்தும் அறியாமலும் படத்தை இயக்கினார். இதன் மூலம், கவனிக்கத்தக்க இயக்குனர் பட்டியலில் இடம்பெற்றார்.
பிரபல ரவுடி பிரகாஷ்ராஜின் வளர்ப்பு பிள்ளை, ஆர்யா. கிராமத்தில் இருந்து, நகரத்திற்கு படிக்க வரும் நவ்தீப்பின் காதலி சமேஷா. ஆர்யாவிற்கும், எதிர் கோஷ்டிக்கும் நடக்கும் மோதலில், சமேஷா காயமடைகிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜின் மகன் தான், நவ்தீப் என தெரிய வருகிறது. பிரகாஷ்ராஜ், தன் மகனை அன்புடன் நெருங்க, அவர் விலகிச் செல்கிறார். இதற்கிடையில் பிரகாஷ்ராஜ், ஆர்யாவை என்கவுன்டர் செய்ய, போலீசார் திட்டமிடுகின்றனர். அனைவரும் ஒரே இடத்தில் நிற்க, 'க்ளைமேக்ஸ்' அரங்கேறுகிறது.
படத்தின் கதாநாயகன், பிரகாஷ்ராஜ் தான். அமைதியான தாதாவாகவும், பாசமான அப்பாவாகவும் அற்புதமாக நடித்திருந்தார். கிராமத்து, அப்பாவி இளைஞனாக நவ்தீப், ரசிக்க வைத்தார். ஆர்யாவிற்கு இப்படம், 'விசிட்டிங் கார்டு' ஆக அமைந்தது. வளரும் ரவுடியாகவும், நவ்தீபிடம் மல்லுகட்டும் அண்ணனாகவும் புன்னகை மலர செய்தார்.
நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு, படத்தின் வேகத்திற்கு பிரம்மாதமாக ஒத்துழைத்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், 'தீப்பிடிக்க தீப்பிடிக்க...' பாடல், தமிழகம் எங்கும் எதிரொலித்தது. பின்னணி இசையிலும் கலக்கியிருந்தார்.
அறிந்தும் அறியாமலும் ஆச்சரியம் அளித்தது!