டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாலிவுட்டில் இப்போதைக்கு லேட்டஸ்ட் பரபரப்பு இதுதான். தனது 2வது மனைவி கிராண் ராவை விவாகரத்து செய்யப்போகும் ஆமீர்கான் விரைவில் தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா சேக்கை மணக்க போகிறார் என்ற செய்தி றெக்க கட்டி பறக்கிறது.
தங்கல் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு ஆமீர்கானும், சனா ஷேக்கும் பல விழாக்களில், பார்ட்டிகளில் ஜோடியாக கலந்து கொண்டார்கள். சினிமாவில் அப்பா மகளாக பார்த்ததால் மக்கள் நிஜத்திலும் அப்படியே பார்த்தார்கள். ஆனால் இருவரும் காதலிப்பதாகவும், அதனால் தான் ஆமீர்கான் மனைவி பிரிந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் பிரிகிறோம் என தகவல் வந்த அடுத்த கணமே ஆமீர்கான் உடன் பாத்திமாவும் அன்று டிரெண்டிங்கில் வந்தார். ஆமீர்கானின் அடுத்த ஆடு பாத்திமா என நெட்டிசன்கள் டிரோல் செய்தனர்.
பாத்திமா சனா ஷேக் ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவில் நடிப்பதற்காகவே மும்பை சென்ற அவர் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். தங்கல் படம் தான் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. ஆமீர்கானுக்கு வயது 56. பாத்திமா ஷனா ஷேக் வயது 29.