அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
ஹிந்தியில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருடன் தெலுங்கிலிருந்து நடிகர் நாகார்ஜுனாவும் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் படம் தான் பிரம்மாஸ்திரா. ஆர்யன் முகர்ஜி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் கிட்டத்தட்ட முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த முன்னணி நட்சத்திரங்களோடு மலையாள திரையுலகை சேர்ந்த சுதேவ் நாயர் என்கிற இளம் நடிகருக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருது பெற்றவர் தான் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிருத்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். ஏற்கனவே இந்தியில் இரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சுதேவ் நாயர், தற்போது நிவின்பாலி நடித்து வரும் துறைமுகம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்தப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக தொப்பை வளர்த்த சுதேவ் நாயர் அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட, அது வைரல் ஆனது .