சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரணவத், அதற்கேற்றார்போல் சர்ச்சையான கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார். பின்விளைவுகள் பற்றி அறியாமல் அவர் கூறும் கருத்துக்களால் தற்போது அவருக்கு புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
ஊரடங்கு ஓரளவுக்கு தளர்வு பெற்றபின், படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கிறார் கங்கனா. அவருடைய தற்போதைய பாஸ்போர்ட் செப்டம்பர் 13ல் காலாவதி ஆவதால் அதை முன்கூட்டியே புதுப்பிப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார் கங்கனா.
ஆனால் அவர் ஏற்கனவே தனது ட்விட்டரில், சர்ச்சையை தூண்டும் விதமாக கருத்துக்களை கூறியதாக, அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளதால் விசாவை புதுப்பிக்க முடியாது என கூறிவிட்டார்கள் விமான நிலைய அதிகாரிகள். இதைத்தொடர்ந்து கங்கனாவும் அவரது சகோதரியும் தங்களுக்கு படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருப்பதை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி, பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான அனுமதி வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை மனு செய்துள்ளனர்.