லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி |

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து வரும் இந்தப் படம், பான் இந்தியா படமாகவும் இரண்டு பாகங்களாகவும் தயாராகிறது.
மகாபாரதத்தை தழுவி உருவாகும் இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை கொண்டதாக அமைகிறது. இந்த நிலையில், இப்படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமா கேரக்டரில் நடிக்கும் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமா, துரோணாச்சாரியாரின் மகன். சிறுவயதிலியே பல திறமைகளை கொண்டிருந்த அஸ்வத்தாமா வில்லாற்றலில் அர்ஜுனன் மற்றும் கர்ணனுக்கு இணையானவன். துரியோதனனுடன் சேர்ந்து அதர்மத்தின் பக்கம் சென்றுவிட்டான். கிருஷ்ணரின் மரணமில்லா சாபத்தால் அசுவத்தாமா இன்றும் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது. இதன்படி பார்க்கும்போது 'கல்கி' படத்தில் அமிதாப் பச்சனும் வில்லனாக நடிப்பதாக தெரிகிறது.