'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' |

மிகப்பெரிய இடத்துக்கு வருவார் என்று கணிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர் நித்தி அகர்வால். அறிமுகமே 'முன்னா மைக்கேல்' என்ற பாலிவுட் படத்தில்தான். அதன்பிறகு தெலுங்கிற்கு வந்த அவர் அங்கு மளமளவென நடித்தார். 'ஈஸ்வரன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தர், 'பூமி' படத்தில் நடித்தார், கடைசியாக 'கலக தலைவன்' படத்தில் நடித்தார். இதற்கு இடையில் ஒரு இளம் தமிழ் நடிகருடன் லிவிங் டு கெதராக வாழ்கிறார். தெலுங்கு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து விட்டார் என பல தகவல்கள் வெளிவர அவரது மார்க்கெட் சரிந்தது.
தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறார். தற்போது இரண்டு பெரிய படங்களில் இரண்டு பெரிய ஹீரோக்களின் ஜோடியாக நடித்து வருகிறார். பவன் கல்யாண் ஜோடியாக 'ஹரி ஹர வீரமல்லு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார், கிரிஷ் ஜெகன்னாத் இயக்குகிறார். கீரவாணி இசை அமைக்கிறார். மெகா சூர்யா புரொடக்ஷன் தயாரிக்கிறது.
அடுத்து நித்தி அகர்வால் பிரபாஸ் ஜோடியாக 'தி ராஜா சாப்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மாருதி இயக்குகிறார், தமன் இசை அமைக்கிறார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கிறது. மாளவிகா மோகனன், ரித்தி குமார், யோகி பாபு, வரலட்சுமி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படங்களின் மூலம் விட்ட இடத்தை பிடித்து விடலாம் எனறு நித்தி உறுதியாக நம்புகிறார்.