அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
'மதுபானக்கடை' படத்தின் மூலம் அறியப்பட்டவர் கமலக்கண்ணன். அதன்பிறகு 'வட்டம்' என்ற படத்தை இயக்கினார். அது பெரிதாக பேசப்படவில்லை. தற்போது அவர் இயக்கி உள்ள படம் 'குரங்கு பெடல்'. இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி உருவாகி உள்ளது. இதில் காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கமலக்கண்ணன் கூறும்போது, “சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும் அவன் தந்தைக்குமான பிணைப்பைச் சொல்லும் படம் இது. 80 மற்றும் 90களில் அரைபெடல் போட்டு சிறுவர்கள் சைக்கிள் கற்றுக்கொள்வது வழக்கம். இது அதைச் சுற்றிப் பேசும் படம் . காவேரி கரையோரத்தில் கத்தேரி என்ற கற்பனை கிராமத்தில் நடப்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான தொடர்பை இந்தப் படம் கொடுக்கும்.
இந்த காலத்தில் ஒரு வயது முதல் ஓட்டக்கூடிய சைக்கிள் வந்து விட்டதால் இந்த அரை பெடல் அனுபவம் சிறுவர்களுக்கு கிடைப்பதில்லை. இப்படியான ஒரு கதை சூழலில் 80 மற்றும் 90களுக்கு இடையில் இருந்து கவித்துவமான வாழ்க்கையை சொல்லும் படம்.
பொதுவாக குழந்தைகளுக்கு பொம்மைகளுக்கு அடுத்தபடியாக ஈர்ப்பை தருவது சைக்கிள்தான். அதுவும் 80ஸ் கிட்ஸ்களுக்கு சைக்கிள் பெரும் கனவாக இருந்தது. அதை பற்றிய படம் இது. இந்த படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் தனது நிறுவனத்தின் சார்பில் படத்தை வெளியிட முன்வந்துள்ளார்” என்றார்.