2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்தாலும் தெலுங்கு சினிமாவில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். 2007ம் ஆண்டு வெளிவந்த 'லக்ஷ்மி கல்யாணம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானவருக்கு 2009ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'மகதீரா ' படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து டார்லிங், பிருந்தாவனம், மிஸ்டர் பெர்பக்ட், நாயக், பிசினஸ்மேன் போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தார்.
திருமணத்திற்கு பிறகு காஜல் தமிழில் நடித்த ஹேய் சினாமிகா, கோஸ்டி, கருங்காப்பியம் படங்கள் அவருக்கு எந்த பலனையும் தரவில்லை. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஆனால் தெலுங்கில் கடைசியாக நடித்த 'பகவன்த் கேசரி' படம் அவருக்கு ரீ என்டரி கொடுத்தது. தற்போது அவர் தெலுங்கில் நடித்துள்ள படம் 'சத்யபாமா'.
இந்த படத்தில் காஜல் சோலோ ஹீரோயினாக என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கியுள்ளார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ்ராஜ் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.