லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இந்திய சினிமாவின் மிக முக்கியமான முன்னணி பாடகிகளில் ஒருவர் எஸ்.ஜானகி. வயதுக்கேற்ற குரலில் பாடும் திறன் படைத்தவர். குழந்தைகள் போன்றும் பாடுவார், முதிய பெண் போன்றும் பாடுவார். 1957ம் ஆண்டு முதல் 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். அவருக்கு இன்று 86வது பிறந்த நாள்.
ஜானகியின் பெருமை உலகம் அறிந்தது. ஆனால் அந்த ஜானகியை இசை உலகிற்கு தந்து கடைசி வரை அவரை பாதுகாத்து காப்பாற்றியது அவரது கணவர் வி.ராம்பிரசாத் என்கிற ராமு. ஆந்திராவில் தெலுங்கு மேடை கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த ஜானகியை ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து பாடகி ஆக்கியவர் ராமு. ஜானகியை திருமணம் செய்த ராமு, ஒரே வருடத்தில் அவரை பாடகி ஆக்கினார்.
அன்று முதல் 1997ம் ஆண்டு மறையும் வரை ஜானகியின் நிழலாக இருந்தவர் ராமு. கச்சேரியா, பின்னணி பாடல் பதிவா எங்கும் எதிலும் அவர் ஜானகியோடு இருந்தார். கடைசி வரை ஜானகியின் ராமுவாகவே அவர் வாழ்ந்தார்.
ராமு பற்றி ஜானகி முன்பு ஒரு பேட்டியில் கூறும்போது "என்னுடைய ஒவ்வொரு பாடலையும் அவர் நேசித்தார். அவர் என் இசையின் மீது பைத்தியம் பிடித்தார். எனது இசைப்பதிவு அமர்வுகளின் போது கூட என்னைத் தனியாக விட்டுவிடமாட்டார், என்னால் அவரையும் விட்டுவிட முடியவில்லை. அவர் தனது முழு வாழ்க்கையையும் எனக்காக செலவழித்தார். இந்த உலகில் அவர் இல்லாவிட்டாலும் எனக்குள் அவர் இன்னும் இருக்கிறார் என்பார்.
ராமுவின் மறைவிற்கு பிறகு வண்ண ஆடைகள் அணிவதை தவிர்த்தார் ஜானகி அம்மா. அவர் மீது கொண்ட காதல் அது.