தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
இந்தி சினிமாவில் அறிமுகமான நிதி அகர்வால் தென்னிந்திய மொழிகளில் வேகமாக முன்னேறி வருகிறார். தமிழில் ஈஸ்வரன், பூமி என 2 படங்களில் நடித்தார். அடுத்து உதயநிதியுடன் நடித்து வருகிறார். தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதையடுத்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க நிதி அகர்வால் ஒப்பந்தமாகி வருகிறார். சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இருக்கும் நிதி அகர்வால், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். விஜய் பற்றி ஒரு வார்த்தை என்ற கேள்விக்கு 'மாஸ்டர்' என்று பதிலளித்துள்ளார். சிம்புவை பற்றி ஒரு வார்த்தை என்பதற்கு "தங்கமான இதயம் கொண்ட மனிதர்" என்று தெரிவித்துள்ளார்.