'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் |
மனிதர்களின் எண்ணங்கள் போல வண்ணங்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட உணர்வுகளை கொடுக்க கூடியவை. நான் வரையும் ஓவியங்களில் வண்ணங்களால் உணர்வுகளை வெளிப்படுத்துகிறேன் என ஒரு புறம் கூறும் இவர் இறைவன் கொடுத்த கொடை தான் இசை என மறுபுறம் உற்சாகம் தெரிவிக்கிறார். தன்னிடமுள்ள பிரத்யேக இசை உபகரணங்களை கொண்டு இயற்கை தந்த இசையை தருவித்து மற்றவர்களை மகிழ்வித்தும் வருகிறார்.
பள்ளி, கல்லுாரி காலங்களில் தேசிய தடகள வீராங்கனையாக திகழ்ந்தவர் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். இப்படி ஓவியர், இசைகலைஞர், கதைசொல்லி, நடிகை, தடகள வீராங்கனை, தொகுப்பாளினி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களில் ஜொலித்து வருகிறார் நடிகை ஹரிதா.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் மனம் திறந்ததாவது...
சென்னை சொந்த ஊர். பள்ளிப்படிப்பை கடலுாரில் முடித்தேன். பொறியியல் படிப்பை சென்னையில் தொடர்ந்தேன். அம்மா மணிமேகலை டாக்டர். நான் இரண்டரை வயதிருக்கும் போதே ஓவியத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைத்தவர் அவர். ஓய்வு நேரங்களில் ஓவியங்களை வரைவேன். ஐந்தாம் வகுப்பு படித்த போது விளையாட்டிலும் ஆர்வம் வர ஷட்டில் கர்க் விளையாட துவங்கினேன். ஆனால் தடகள போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிட்டியது. பள்ளி காலங்களிலேயே ஓட்டங்களில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றேன். கல்லுாரியில் மாநில பிரதிநிதியாக தேசிய போட்டிகளில் ஜூனியர், சீனியர் பிரிவில் சாம்பியன் பட்டங்களை பெற்றிருக்கிறேன். இதற்கிடையே நான் வரைந்த ஓவியங்களை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் காட்சிப்படுத்தி வந்தேன்.
நான் வரைந்த, 'கண் ஓவியம்' ஒன்றை பார்த்த தோழிகள் இந்த கண்கள் ஏதையோ சொல்வதாக தெரிவித்தனர். என்னுடைய சில ஓவியங்களை பார்ப்போர் உடனடியாக அதை கடந்து செல்ல மாட்டார்கள். அந்தளவுக்கு அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும். ஓவ்வொரு ஓவியத்தை பற்றியும் பிறருக்கு விளக்க துவங்கி, கதைசொல்லியாகவும் பின்னாளில் மாறினேன்.
இந்நிலையில் கொரோனா காலகட்டம் வந்தது. அதை கடந்து செல்ல வேண்டிய நிலை. அப்போது தான் ஓவியம், தடகளம் தாண்டி இசை மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டது. மழை பொழியும் போது எழும் ஓசை, கடல் அலைகள் சத்தம் போன்ற இயற்கை இசையை தரும் கடம்பா போன்ற இசை உபகரணங்களை பயன்படுத்தி வெளிப்படுத்தினேன். இதற்காக சில பிரத்யேக இசை உபகரணங்கள் கிடைக்கின்றன. பழங்குடியினர் பயன்படுத்தும் மூங்கில் வாத்தியம் உள்ளிட்டவைகளையும் இசைத்து வருகிறேன். இதன் மூலம் சவுன்ட் ஹீலிங் செய்யும் வாய்ப்பும் கிட்டியது.
கல்லுாரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்த அனுபவத்தில் டப்பிங், மாடலிங், ஆங்கரிங் செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன் சில விளம்பர படங்களுக்கு டப்பிங் பேச வாய்ப்பு கிட்டியது. அதன் மூலம் என்னை அறிந்த இயக்குனர்கள் படங்களில் நடிக்க அழைக்க ஜிப்ஸி, ஒரு கிடாயின் கருணை மனு, சூரரைப்போற்று, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.
பைசன், ராட்சசன், துண்டுபீடி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறேன். ஏழு ஆண்டுகளில் 49 படங்களை தொட்டும் விட்டேன். படப்பிடிப்புகளுக்கு மத்தியில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சவுண்ட்ஹீலிங் பயிற்சி அளித்து வருகிறேன்.
மக்களுக்கு அறிமுகமான நடிகையாக இருந்தாலும் கூட ஓவியமும் இசையையும் இறுதி வரை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் ஆசை.